search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேடிஎஸ் எம்எல்ஏ"

    ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை குமாரசாமி இன்று வெளியிட்டார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜனதா காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.



    இந்த நிலையில் முதல் மந்திரி குமாரசாமி இன்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    நாகனகவுடாவின் மகனும், எடியூரப்பாவும் போனில் பேசிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இன்று ஆடியோவாக வெளியிடப்பட்டது. இந்த ஆடியோ வெளியானதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர். #Kumaraswamy #Yeddyurappa
    ×